ரூ. 1,500 கோடி வசூலித்த ராமாயணா!
ராமாயணா வசூல் குறித்து...
ராமாயணா திரைப்படம் உலக அளவில் ரூ. 1500 கோடியை வசூலித்துள்ளது.
நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.
அட்டகாசமான விஎஃப்எக்ஸ் உருவாக்கங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ராமாயணா இதுவரை உலக அளவில் ரூ. 1,500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தச் சாதனையைச் செய்த முதல் பாலிவுட் திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.
அதே நேரம், ராவணனாக நடித்த நடிகர் யஷ்ஷுக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. டாக்ஸிக் திரைப்படத்தால் கடும் எதிர்வினைகளைச் சந்தித்த யஷ், மீண்டும் ராமாயணா மூலம் தனக்கான பாராட்டுகளைப் பெற்றுள்ளது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.