FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நஸ்லனுக்கு நடிகர் சூர்யா பரிசளித்த கைக்கடிகாரத்தின் விலை இவ்வளவா?

சீன் வெற்றியைத் தொடர்ந்து நஸ்லனுக்குப் பரிசளித்த சூர்யா...

14 வினாடிகள் முன்பு
நடிகர்கள் சூர்யா, நஸ்லன்
பகிர்:

நடிகர் சூர்யா நடிகர் நஸ்லனுக்கு கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்துள்ளார்.

கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சீனும் ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து சூர்யாவையும் அவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தில் நடிகர் நஸ்லன் வில்லனாகவும் நடிகை நஸ்ரியா நாயகியாகவும் நடித்திருந்தனர். இருவரது பங்களிப்பும் படத்திற்கு வெற்றிக்குப் பக்கபலமாக அமைந்ததால் அவர்களுக்கும் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.

இந்த நிலையில், சீன் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா தனக்குக் கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்ததாக நேர்காணலின் போது நஸ்லன் கூறியிருக்கிறார்.

அவர் கையில் அணிந்திருந்த அந்தக் கடிகாரம் கார்டியர் சாண்டோஸ் (Cartier Santos) வகை கைக்கடிகாரம் ஆகும். இதன் விலை ரூ. 9 லட்சத்துக்கும் அதிகமானது. சூர்யாவின் ழகரம் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்காக இந்தப் பரிசை அவர் வழங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

Actor Suriya has gifted a wristwatch to actor Naslen.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.