யு / ஏ! விரைவில் திரைக்கு வரும் ஜாலியா இருந்த ஒருத்தன்!
ஜாலியா இருந்த ஒருத்தன் தணிக்கை செய்யப்பட்டது...

நடிகர் ஜீவாவின் ஜாலியா இருந்த ஒருத்தன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சிவா மனசுல சக்தி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராஜேஷும் நடிகர் ஜீவாவும் 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு ’ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
நாயகனாகவும் ஜீவாவும் நாயகியாக இவானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் பரிதாபங்கள் சுதாகரும் நடித்துள்ளனர். அண்மையில், இதன் படப்பிடிப்பு நிறைவடைந்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்திற்கு யு / ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் ஜீவா நடிப்பில் உருவான தகப்பன் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.