நிரம்பி வழியும் சபரிமலை முன்பதிவு! வருவதோ பாதி பக்தர்கள்! சிக்கலில் கோயில் நிர்வாகம்!
நிரம்பி வழியிம் சபரிமலை முன்பதிவுகள், ஆனால் கோயிலுக்கு வருவதோ பாதி பக்தர்கள்தான் என்பதால் குழப்பத்தில் கோயில் நிர்வாகம்
சபரிமலை கோயிலுக்கு வருவதற்கான முன்பதிவு நிரம்பி வழிந்தாலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பாதியாக இருப்பதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறது திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம்.
நவ. 18ஆம் தேதி 80 ஆயிரம் பக்தர்கள் முனப்திவ செய்திருந்தனர். ஆனால், கோயிலுக்கு வந்ததோ 37 ஆயிரம் பேர் மட்டுமே. இது மட்டுமல்ல, டிச. 25ஆம் தேதி வரை முன்பதிவ முழுமையாக நிரம்பியும் விட்டது. இதே நிலை நீடித்தால் என்ன செய்வது? இதனை எப்படி சரி செய்வது என கோயில் நிர்வாகம் தவித்து வருகிறது.
கார்த்திகை மாதம் பிறந்துவிட்ட நிலையில், சபரிமலைக்கு மாலை அணிந்து வரும் பக்தர்களின் வசதிக்காக, சபரிமலை ஆன்லைன் முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துவிட்டுத்தான், அன்றைய நாளில் கோயிலுக்கு வர வேண்டும்.
ஆனால், முன்பதிவு முழுமையாக நிரம்பியிருந்தாலும், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருப்பது கோயில் நிர்வாகத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக ஆன்லைன் மூலம் முன்கூட்டியே தரிசனம் நேரத்தை பதிவு செய்யும் பக்தர்கள் கோயிலுக்கு வராமல் போவது ஏன்? என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.
மண்டல-மகரவிளக்கு பூஜைக் காலத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு மூலம் முக்கியப் பாதை மற்றும் வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு நாள்தோறும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்குப் பூஜைக் காலம் நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கியருக்கிறது. இந்த காலத்தில், சபரிமலை சென்று சுவாமியை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்த வசதி இலவசமாகவே, கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. ஒரே நாளில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதன்படி, சபரிமலைக்கு நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவ மூலம் 66 ஆயிரம் பேரும், நேரடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பேரும் வரலாம்.
எனவே டிச. 25ஆம் தேதி வரை பக்தர்கள் யாரும் புதிதாக முன்பதிவு செய்ய முடியாது, அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன, ஆனால் முன்பதிவு செய்த பக்தர்களும் முழுமையான அளவில் வருவதில்லை. இதன் பின்னணியில், சுற்றுலா நிறுவனங்கள், அதிக அளவில் முன்பதிவுகளை செய்துவிட்டு பின்னாளில் ரத்து செய்வது காரணமாக இருக்கலாமா? என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்போதைக்கு, நாள் ஒன்றுக்கு கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தி, கூட்டம் அதிகம் இல்லாத நாள்களில் இவர்களை உடனடியாக சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.