முகப்பு

ஃபகத் ஃபாசில் - பிரேம் குமார் திரைப்படத்தின் பெயர்!

ஃபஹத் ஃபாசில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட்....

41 வினாடிகள் முன்பு
ஃபகத் ஃபாசில் - பிரேம் குமார் திரைப்படத்தின் பெயர்!
ஃபகத் ஃபாசில்
பகிர்:

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துவரும் புதிய திரைப்படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கினார்.

அப்படம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டதால் நடிகர் ஃபகத் ஃபாசிலை வைத்து தனது அடுத்தப் படத்தை பிரேம் குமார் இயக்கி வருகிறார்.

Advertisement

Advertisement

வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ஷிவதா நாயகியாக நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிலையில், இப்படத்திற்கு அசரீரி எனப் பெயரிட்டுள்ளனர். மேலும், இப்படம் அடுத்தாண்டு ஜன. 1 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The title of the new film in which actor Fahadh Faasil is starring has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.