முகப்பு

அப்பா - மகன் கதையாவது கவனம் பெறுமா?

நடிகர் ஜீவாவின் தகப்பன் திரைப்படத்துடன் அவெஞ்சர்ஸும் வெளியாகிறது...

20 வினாடிகள் முன்பு
அப்பா - மகன் கதையாவது கவனம் பெறுமா?
பகிர்:

நடிகர் ஜீவா நடிப்பில் உருவான தகப்பன் திரைப்படம் டிச. 24 வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவில் எவ்வளவு வித்தியாசமான கதைக்களங்களுடன் திரைப்படங்கள் வெளியானாலும் அவ்வபோது அப்பா - மகள், அப்பா - மகன் கதைப் பின்னணியில் உருவாகும் பாசத்திரைப்படங்களும் வெளியாகிவிடும். சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் பாசப்போராட்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதைகள் தற்போது அப்பாக்களின் பக்கமாகவும் திரும்பியிருக்கின்றன.

அண்மையில், கடந்த வெள்ளிக்கிழமை இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அப்பா குட்டி திரைப்படம் தந்தைக்கும் மகளுக்குமான கதையாக எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் கலவையான விமர்சனங்களைப் பெற்றதாலும் ஓம் திரைப்படத்தின் வரவேற்பாலும் அப்பா குட்டிக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

அதே போல், நடிகர் ஜீவா அடுத்ததாக தகப்பன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இது அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான கதையாக உருவாகியுள்ளது. இப்படம் வெளியாகும் முன் அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே மற்றும் டியூன் 3 ஆகியவை அதற்கு முந்தைய வாரம் வெளியாகவுள்ளன. அப்பா - மகள் கதைக்கு எதிர்பார்த்த கவனம் கிடைக்காமல் இருக்கும் சூழலில் அப்பா - மகன் கதை இப்பெரிய வெளியீடுகளைக் கடந்து கவனம் பெறுமா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

The film Thagappan, starring actor Jiiva, is set to hit the screens on December 24.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.