முகப்பு

நிரந்தரமாக மூடப்படும் சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்!

சென்னை ஆல்பர்ட் திரையரங்கம் மூடப்படுகிறது....

51 வினாடிகள் முன்பு
நிரந்தரமாக மூடப்படும் சென்னை ஆல்பர்ட் திரையரங்கம்!
பகிர்:

சென்னையிலுள்ள ஆல்பர்ட் திரையரங்கம் மூடப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் திரையரங்கங்களுக்கும் மிகப்பெரிய பங்களிப்புகள் இருக்கின்றன. தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் திரையரங்குகள் குறைவுதான் என்றாலும் பல ஆண்டுகளாக ரசிகர்களின் பொழுதுபோக்கு கொண்டாட்டங்களின் அடையாளமாக சில திரையரங்குகள் ஒரு காலகட்டத்தின் நினைவாக இன்று செயல்பட்டு வருகின்றன.

அப்படி, சென்னை எழும்பூர் பகுதியில் கடந்த 48 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆல்பர்ட் திரையரங்கம் தற்போது நிரந்தரமாக மூடப்படுவதாகவும் அந்த இடம் விற்பனைக்கு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

ரஜினி ரசிகர்களின் ஆஸ்தான திரையரங்குகளில் ஒன்றான இது பாட்ஷா, படையப்பா திரைப்படங்களை அதிக நாள் காட்சியப்படுத்தி அவை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதற்கு உதவி புரிந்தது. அடுத்தடுத்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகர்களுக்கும் ஆல்பர்ட் திரையரங்கில் கூட்டம் இருந்தால் படம் வெற்றி என்கிற நம்பிக்கைகள் இருந்தன.

முக்கியமாக, லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அத்திரையரங்கம் 40 ஆண்டுகளுக்கும் அதிகமான நினைவுகளைக் கொடுத்திருப்பதால் திடீரென மூடப்படுவது சோகத்தை அளித்துள்ளது. வேறு ஏதாவது திரையரங்க உரிமையாளர்கள் இதனைக் கைபற்றி சீரமைத்து திரைப்படங்களை வெளியிடுவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ஆனால், ஆல்பர்ட் திரையரங்கம் அருகே இருக்கும் பெரிய டாஸ்மாக் கடையாலும் அங்கே மது அருந்திவிட்டு திரையரங்கம் வரும் சில கூட்டத்தினராலும் இத்திரையரங்கை மீண்டும் நடத்த வாய்ப்புகள் குறைவுதான் என்றும் கூறப்படுகின்றன.

Reports indicate that the Albert Theatre in Chennai is closing down.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.