FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தமிழகத்தில் மீண்டும் அதிகாலைக் காட்சிகள்?

திரையரங்குகளில் மீண்டும் அதிகாலைக் காட்சிகளை நடத்த திட்டம்...

- x
பகிர்:

தமிழகத்தில் திரைப்படங்களுக்கான அதிகாலைக் காட்சி மீண்டும் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் முதல் நாள் முதல் காட்சிக்கான நேரம் என்பது கடந்த பல ஆண்டுகளாக அதிகாலை 4 மணியிலிருந்து ஆரம்பமாகிக்கொண்டிருந்தன. மெல்ல, மெல்ல அந்த வழக்கம் பெரும்பாலான பகுதிகளில் கைவிடப்பட்டு இன்று ஆந்திரம், தெலுங்கானா, கேரளத்தில் முதல் காட்சி காலை 6 மணிக்குத் தொடங்குகின்றன. அதில், சில திரைப்படங்கள் சலுகைகளைப் பெற்று அதிகாலையிலும் வெளியாகின்றன.

தமிழில் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களை அதிகாலை 4.30 மணிக்கே காணும் கொண்டாட்ட காட்சிகள் இருந்தன. ஆனால், நடிகர் அஜித்தின் துணிவு திரைப்பட வெளியீட்டுக் கொண்டாட்டத்தின் போது ரசிகர் ஒருவர் உயிரிழக்க, அதிகாலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு முதல் காட்சி காலை 9 மணிக்கே தொடங்கும் என்பதை நடைமுறைப்படுத்தினர்.

Advertisement

Advertisement

சில ஆண்டுகளாக இத்திட்டம் தொடரும் நிலையில், தற்போது தமிழக அரசு அதிகாலை 6 மணிக்கான காட்சிகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரும் திட்டத்தில் இருக்கிறதாம். இதன், முதல் திரைப்படமாக நடிகர் சூர்யாவின் சீன் அமையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில காலம் கழித்து மீண்டும் அதிகாலைக் காட்சியில் திரைப்படங்களைப் பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் தெரிந்தாலும் சிலர் பாதுகாப்புக் காரணங்களையும் ஆலோசிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

Reports indicate that early-morning film screenings are set to be reintroduced in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments