முகப்பு

மூன்று மொழிகள்... ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற நடிகை நஸ்ரியா!

நடிகை நஸ்ரியாகவுக்கு கடைசி மூன்று திரைப்படங்க வெற்றி பெற்றுள்ளன...

7 வினாடிகள் முன்பு
மூன்று மொழிகள்... ஹாட்ரிக் வெற்றியைப் பெற்ற நடிகை நஸ்ரியா!
பகிர்:

நடிகை நஸ்ரியா தொடர்ந்து வெவ்வேறு மொழிகளில் நடித்து வெற்றியைப் பெற்றுள்ளார்.

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா. அடுத்து ராஜா ராணி படத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனையடுத்து மலையாள நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். 

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் 2018-ல் கூடே படத்தின் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார். பின்னர் ஃபகத் ஃபாசிலுடன் அவர் இணைந்து நடித்த டிரான்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

Advertisement

Advertisement

மீண்டும் இடைவெளி எடுத்துக்கொண்டு நல்ல கதைகளுக்குக் காத்திருந்தார். அதன்படி, நடிகர் நானியுடன் தெலுங்கில் அடடா சுந்தரா திரைப்படத்தில் நடித்து பெரிய வெற்றியைப் பெற்றார். அடுத்ததாக, மலையாளத்தில் சூட்சுமதர்ஷினி திரைப்படத்தில் கதை நாயகியாக நடித்து அமர்க்களப்படுத்தியதுடன் வணிக வெற்றியையும் பெற்றார். இறுதியாக, தமிழில் நடிகர் சூர்யாவுடன் சீன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இப்படமும் வரவேற்பைப் பெற்று ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது. அடுத்தடுத்து தென்னிந்திய மொழிகளில் நஸ்ரியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Actress Nazriya has consistently achieved success by acting in various languages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.