முகப்பு

சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்! பிரபு தேவாவின் மூன் வாக் பட டிரைலர்!

பிரபு தேவா மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள “மூன் வாக்” படத்தின் டிரைலர்...

சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ஏ.ஆர். ரஹ்மான்! பிரபு தேவாவின் மூன் வாக் பட டிரைலர்!
மூன் வாக் பட டிரைலரில்... - கோப்புப் படம்
பகிர்:

பிரபு தேவா மற்றும் யோகி பாபு இணைந்து நடித்துள்ள “மூன் வாக்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா மற்றும் நடிகர் யோகி பாபு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “மூன் வாக்”. இப்படத்தை, அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கியுள்ளார்.

நடிகர்கள் அஜூ வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரெடின் கிங்க்ஸ்லே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நிஷ்மா, சுவாமிநாதன், சுஷ்மிதா, தீபா சங்கர் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இத்துடன், “மூன் வாக்” படத்துக்கு இசையமைத்துள்ள முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நகைச்சுவைக் கதைகளத்துடன் உருவாகியுள்ள “மூன் வாக்” திரைப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் இன்று (நவ. 27) வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, “மூன் வாக்” திரைப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The trailer for the film "Moon Walk," starring Prabhu Deva and Yogi Babu, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.