மூன் வாக்
பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'மூன் வாக்' படம் டிசம்பர் 24-இல் வெளியாகிறது.

பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'மூன் வாக்' படம் டிசம்பர் 24-இல் வெளியாகிறது.
இதுகுறித்து பிரபுதேவா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'குடும்ப நகைச்சுவை பொழுதுபோக்குப் படமான 'மூன் வாக்' திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த விடுமுறையை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து சிரித்து மகிழ, சிரிப்பொலிகள் நிறைந்த திரையரங்கக் கொண்டாட்டத்துக்குத் தயாராகுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.
அவருடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், மலையாள நடிகர்கள் அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்ததோடு, அனைத்துப் பாடல்களையும் அவரே பாடியுள்ளதுடன் ஒரு காட்சியிலும் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏ.ஆர்.ரஹ்மான் - பிரபுதேவா கூட்டணியில் 1990-ஆம் ஆண்டுகளில் வெளியான 'காதலன்', 'மிஸ்டர் ரோமியோ', 'லவ் பேர்ட்ஸ்' படங்களும் அதன் பாடல்களும் வெற்றி பெற்றிருந்தன. இருவரும் 1997-ஆம் ஆண்டில் வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்திருந்தனர். சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு 'மூன் வாக்' படத்தில் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கி உள்ளார். அனுப் வி ஷைலஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.