யுவன் இசையில்... பாடலாசிரியராக அறிமுகமாகும் நா. முத்துக்குமார் மகன்!
பாடலாசிரியராகும் நா. முத்துக்குமார் மகன்...

மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.
2000-களுக்குப் பின்பான தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த பாடல்களை எழுதியவர் நா. முத்துக்குமார். அவர் எழுதிய காதல், வாழ்க்கைப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் ரசனையை வளர்க்கும் வகையில் இருக்க, யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து நூற்றுக்கணக்கான ஹிட்ஸ்களை கொடுத்தார்.
முக்கியமாக, காதல் கொண்டேன், கற்றது தமிழ், செவன்ஜி ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினி உள்பட பல திரைப்படங்களில் கூட்டணி அமைத்து ரசிகர்கள் இன்றும் கேட்கும் பாடல்களை உருவாக்கினர்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு நா. முத்துக்குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் 41-வயதிலேயே மறைந்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் சோகத்தையும் அளித்தது. இன்று இருந்திருந்தால் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா. முத்துக்குமார் என்கிற வரிசையே இருந்திருக்கும்.
நா.மு. இறந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் ராஜா’ஸ் ப்ளே லிஸ்ட் (raaja's play list) திரைப்படத்தில் நா. முத்துக்குமார் மகன் ஆதவனை பாடலாசிரியராக யுவன் அறிமுகம் செய்ய உள்ளார். தேசிய விருதுகளை வென்ற அப்பாவைப் போலவே மிகச்சிறந்த பாடல் ஆசிரியராக ஆதவன் வளர வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.