FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நீண்ட நாள் கழித்து... மொத ராத்திரி திரைப்படத்தைப் பாராட்டிய மாதவன்!

மொத ராத்திரியைப் பாராட்டிய மாதவன்...

நடிகர்கள் மாதவன், ரிஷிகாந்த், அனிஷ்மா
பகிர்:

நடிகர் மாதவன் மொத ராத்திரி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் ’மொத ராத்திரி’.

புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஓடிடி வெளியீட்டில் மேலும் பரவலான கவனத்தை ஈர்த்ததுடன் இந்தாண்டின் நல்ல தமிழ் திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்த்த நடிகர் மாதவன், “அட்டகாசமான திரைப்படம்! நீண்ட காலம் கழித்து ஒரு தமிழ்த் திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தேன். கைதட்டி சிரித்து, சிரித்து பார்த்தேன். இப்படி படம் பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது... திரையில் சிறப்பான கதையை அபாரமான நடிப்புடன் சொல்லியிருக்கிறார்கள். மொத்த படக்குழுவினருக்கும் எழுந்து நின்று கைதட்டுகிறேன்.” எனப் பாராட்டியுள்ளார்.

Actor Madhavan has praised the movie Modha Rathiri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments