ஜெயிலர் - 2 டிரைலரில் மோகன்லால் ஆதிக்கம்?
ஜெயிலர் - 2 டிரைலர் குறித்து....
நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 டிரைலர் பின்னூட்டங்களில் மோகன்லால் ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால், நேற்று (அக். 5) வெளியான இப்படத்தின் டிரைலர் காட்சிகள் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
அதே நேரம், 1 கோடிக்கும் மேலான பார்வையைப் பெற்ற இந்த டிரைலருக்கு 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காமெண்ட் செய்த்துள்ளனர். இதில், பெரும்பாலும் டிரைலரில் இடம்பெற்ற மோகன்லாலின் தோற்றத்தைப் பாராட்டி மலையாள ரசிகர்கள் கருத்திட்டு வருகின்றனர். மேலும், காமெண்ட் பகுதி முழுக்க லாலேட்டனின் ஆதிக்கம்தான் என்றும் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் மோகன்லாலுடன் சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Mohanlal's fans are dominating the comments section of the trailer for actor Rajinikanth's Jailer 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.