அட்லீ, விஜய் சேதுபதி, சாய் அபயங்கர்..! பத்தா படக்குழுவை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்!
“பத்தா” படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியது குறித்து...
நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த "பத்தா" திரைப்படக் குழுவை நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் வெளியான 3 ஆவது திரைப்படம் “பத்தா”. கடந்த வியாழக்கிழமை (அக்.1) திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையில், இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜின் நடிப்புக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், பத்தா திரைப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், தயாரிப்பாளர் அட்லீ, இசையமைப்பாளர் சாய் அபயங்கர், நடிகர்கள் ஹரி கிருஷ்ணன், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்டோரை நடிகர் கமல்ஹாசன் இன்று (அக். 7) நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
முன்னதாக, பத்தா திரைப்படத்துக்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Kamal Haasan personally invited and commended the team behind the film "baththa," starring Vijay Sethupathi.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.