FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஒருவர் இறந்ததும் அவர் செய்த குற்றங்கள் அழிந்து விடாது: தனுஸ்ரீ தத்தா

நடிகை தனுஸ்ரீ தத்தா மறைந்த நடிகர் நானா படேகர் குறித்து கூறியிருப்பதாவது...

9 அக்டோபர் 2026, 5:58 pm IST
நானா படேகர் , தனுஸ்ரீ தத்தா - கோப்புப் படங்கள்.
பகிர்:

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு குறித்து, “ஒருவர் இறந்து விட்டால் அவரது குற்றங்கள் ஒன்றும் காணாமல் போகிவிடாது” என்றார்.

நடிகர் நானா படேகர் வியாழக்கிழமை (அக். 8) அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

மும்பையில் வசித்துவரும் தனுஸ்ரீ 2018ல் படப்பிடிப்பில் நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம் சுமத்தி, வழக்கை மேற்கொண்டார். ஆனால், விசாரணையில் நானா படேகர் குற்றமற்றவர் என நிரூபணமானது.

Advertisement

Advertisement

அந்த சர்ச்சைக்குப் பிறகு அவர் ரௌடிகளால் தொல்லைக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில் நானா படேகர் மறைவுக்கு அவர் கூறியிருப்பதாவது:

நானா படேகர் மறைவுக்கு நான் என்ன ரியாக்‌ஷன் செய்வது என்று முடிவு எடுத்திருக்கிறேன். ஒருநாள் முழுவதும் திட்டங்கள் இருக்கின்றன. அந்த வேலைகள் எல்லாம் முடித்துவிட்டுதான் பதிவிட வேண்டும்.

ஒரு கெட்ட மனிதன் இறந்து விட்டதற்கு ஊடகங்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து மாலையில் வருத்தமாக இருந்தேன். அவருடன் உலகத்துக்கு வேறு விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கலாம். ஆனால், எனது அனுபவம் எனக்குத்தான் தெரியும்.

இறந்து விட்ட பிணங்களை தோண்டி எடுக்க நானும் விரும்பவில்லை. அதனால் எனது ரியாக்‌ஷன்களை தனிப்பட்ட முறையில் வைத்திருந்தேன். சில நாள்கள் கழித்து எனது கருத்தை வெளிப்படுத்த விரும்பினேன். ஆனால், ஒருவர் இறந்துவிட்டதும் அவர் செய்த குற்றச் செயல்கள் முற்றிலும் அழிந்துவிடாது.

நானா படேக்ர் யாருக்கு எல்லாம் பாலியல் தொல்லைக் கொடுத்தாரோ அதெல்லாம் முடிந்துவிடுமா? கடவுள் கூட மன்னிப்புக் கேட்காதவரை மன்னிப்பதில்லை. முதலில் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேளுங்கள். கொடூரன் இறந்துவிட்டான் என்பது என்னுடைய எதார்த்தம். இறப்பிலும் அந்த மனிதன் எனக்குத் தொல்லை அளிக்கிறார்.

2018க்குப் பிறகு எனக்கு கடினமான காலமாக இருந்தது. நான்கு நாள்கள் கூட வாழ முடியவில்லை. என் வாழ்க்கையில் தாக்குதல் நடத்தினார்கள். நேர்காணல்களில் நான் கூறியவை எல்லாம் சிறிய பகுதிகள்தான்.

2018முதல் நான் தினமுன் கஷ்டப்பட்டேன். குறிப்பாக 2020க்குப் பிறகு தினமும் அவரால் கஷ்டத்தை அனுபவித்தேன். அவர் தனியாக என்னை தொல்லைப்படுத்தவில்லை ஒரு கூட்டத்துடன் செய்தார். அவர் என் வாழ்க்கையின் மிகப்பெரிய பூதம். என் வாழ்க்கையை நரகமாக்கியவர் எனக் கூறியுள்ளார்.

summary

He made my life hell: Tanushree Dutta on Nana Patekar's death, life after Me Too movement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments