பிரபல கிரிக்கெட் வீரரைக் காதலிக்கும் திவ்ய பாரதி?
திவ்ய பாரதி காதலித்து வருவதாகத் தகவல்....
நடிகை திவ்ய பாரதி பிரபல கிரிக்கெட் வீரரைக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி. பேச்சுலர் வெற்றிக்குப் பின் தமிழில் பெரிய நாயகியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. முகன் ராவுடன் ’மதி மேல் காதல்’ என்கிற படத்தில் நடித்தார். தெலுங்கில் ’பாகல்’ படத்தை இயக்கிய நரேஷ் குப்பிலியின் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்னையால் திவ்ய பாரதி விலகினார். தொடர்ந்து, இயக்குநரும் வெளியேறினார்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, மகாராஜா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்த கிங்ஸ்டன் திரைப்படமும் தோல்விப்படமானது.
இதனால், முன்னணி திரைப்பட வாய்ப்புகள் அமையாத சூழலில்தான் திவ்ய பாரதி உள்ளார். ஆனாலும், அவ்வபோது தெலுங்கில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை திவ்ய பாரதி காஷ்மீரைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக்கைக் காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் இந்திய அணியில் இடம்பெற்றவர். ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 26 வயதான உம்ரானும் 34 வயதான திவ்ய பாரதியும் காதலிக்கும் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
It is reported that actress Divya Bharathi is in a relationship with a famous cricketer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.