FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

என்னென்ன திட்டங்கள்... வைரலாகும் வாமிகா கபி விடியோ!

வாமிகா கபி பகிர்ந்த ஏஐ விடியோ....

11 அக்டோபர் 2026, 3:05 pm IST
வாமிகா கபி
பகிர்:

நடிகை வாமிகா கபி இன்ஸ்டாவில் பகிர்ந்த விடியோவுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை வாமிகா கபி. அண்மையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த டிசி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது. வணிக ரீதியாக ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வசூல் வெற்றியைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் நடிகை வாமிகா கபிக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது. டிசியில் சந்திரா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக வாமிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வரவேற்பால் நடிகை வாமிகா கபியும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் வாமிகா கபி விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில், பிளான் ஏ (Plan A) முதல் பிளான் எம் (Plan M) வரை உள்ள ஆசைகளை ஒவ்வொன்றாக ஏஐ புகைப்படங்களாக்கி அதனை விடியோவாக உருவாக்கி வெளியிட்டுள்ளார். இதில் பிளான் ஏ (குடும்பத்துடன் வாழ்வது) தோல்வியடைந்தாலும் 25 பிளான்களை வைத்திருக்கிறேன் என பூனைகள் மற்றும் நாய்களுடன் மட்டும் இருப்பது, உலகம் சுற்றுவது, முழுநேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பது, சாமியார் ஆவது என ஒவ்வொன்றும் பிறரை ரசிக்க வைத்திருப்பதால் இந்த விடியோவுக்கு பல பிரபலங்களும் சிரிப்பு எமோஜியைப் பதிவிட்டுள்ளனர்.

The video shared by actress Wamiqa Gabbi on Instagram is receiving a positive response.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments