இசை - இளையராஜா... நடிகர் சசிகுமாரின் புதிய திரைப்படம்!
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம்...
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.
இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது.
ஹரிஷ் சந்தோஷ் இயக்கும் இப்படத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகைகள் ஸ்வாசிகா, நந்திதா ஸ்வேதா, அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு முறையாக நடைபெற உள்ளது.
the film starring actor Sasikumar has been held.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.