தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!
தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் மறைவு பற்றி...
மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் மகனும் நடிகருமான கார்த்திக் சபேஷ் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
37 வயதாகும் கார்த்திக் சபேஷ், குளிர் 100, வல்லவன், பட்டத்து யானை, உதயம் NH4 உள்ளிட்ட பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
Advertisement
Advertisement
கடந்த சில நாள்களாக கார்த்திக் சபேஷின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
மறைந்த கார்த்திக் சபேஷுக்கு மனைவி ரம்யா கார்த்திக் மற்றும் இரு மகள்கள் பிரிஷானிதாரா, ஹைரானிதாரா ஆகியோர் உள்ளனர்.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இசையமைப்பாளர் தேவா உயிரிழந்த நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் அவரது சகோதரர் மகன் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ், கடந்தாண்டு அக்டோபர் மாதம் காலமானது குறிப்பிடத்தக்கது.
Deva's nephew Karthik Sabesh passes away!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.