பிரபாஸின் ஃபௌஸி அறிமுக விடியோ..! ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் பிரபாஸின் ஃபௌஸி படத்தின் ரிலீஸ் தேதி, அறிமுக விடியோ குறித்து...
நடிகர் பிரபாஸின் ஃபௌசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது அறிமுக விடியோவும் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் 'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஃபௌசி திரைப்படம் பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.
தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான 'ஃபௌசி' வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருந்தது. பின்னர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள அறிமுக விடியோவில் அடுத்தாண்டு மார்ச் 19ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
ஃபௌசி படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக இமான்வியும் முக்கிய கதாபாத்திரங்களில் அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Fauzi Teaser: Prabhas's Fiery Avatar As A Rebel Soldier Promises Explosive Freedom Saga
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.