நானி தயாரிப்பில் நிதினின் புதிய பட ரிலீஸ் தேதி!
நானி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...
பிரபல தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் உருவாகியுள்ள ’அலைஸ் ருக்மணி’ என்ற புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் நானியின் தயாரிப்பு நிறுவனமான யுனானிமஸ் புரடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. முன்னதாக பெரும் வரவேற்பைப் பெற்ற கோர்ட் - ஸ்டேட் வெர்சஸ் ஏ நோபடி என்ற படத்தினை தயாரித்திருந்தது.
அலைஸ் ருக்மணி என்ற படத்தினை முரளி காந்த் இயக்கியுள்ளார். இதில் நிதின் நாயகனாக நடித்துள்ளார். நானியின் தங்கை தீப்தி கன்டா தயாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement
முன்னதாக முரளி காந்த் இயக்கிய தண்டோரா படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் கத்தார் திரைப்பட விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அலைஸ் ருக்மணி என்ற படம் டிசம்பர் 4ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண நடுத்தர மனிதனாக இருக்கும் நிதின் மக்கள் மத்தியில் இருக்கும் புகைப்படம் கவனம் பெற்றுள்ளது.
விஜய் புல்கனின் இசையமைத்து வரும் இந்தப் படத்தில் நிதீன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Nani's production Nithiin-starrer Alias Rukmini locks release date
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.