இயற்கை வள சுரண்டலுக்கு எதிரான சிவப்பு நட்சத்திரம்
லீஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'சிவப்பு நட்சத்திரம்' என படத்தின் டைட்டிலை, நடிகர் சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார்.
இயற்கை வளங்கள் சூறையாடலுக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ள சிவப்பு நட்சத்திரம் திரைப்படத்தை திரைக்கதை, வசனம் எழுதி, டல்ஹௌசி பிரபு இயக்கியுள்ளார். அவரே திரைப்படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை வர்ஷா நடிக்கிறார்.
இவர்களுடன் பொன்வண்ணன், OAK சுந்தர், பழ கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பீகே, இசை தீபன் சக்கரவர்த்தி, எடிட்டிங் செந்தில் வீரா ஆகியோர் பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் தலைப்பை நடிகரும், இயக்குநருமான சமுத்திரகனி வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.