FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் பதக்கத்தை தவறவிட்ட ஒலிம்பிக் நட்சத்திரம் மனு பாக்கர்!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் நட்சத்திரம் மனு பாக்கர் பதக்கத்தை தவறவிட்டுள்ளப் பற்றி...

23 செப்டம்பர் 2026, 1:33 pm IST
பகிர்:

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் நட்சத்திரம் மனு பாக்கர் பதக்கத்தை தவறவிட்டுள்ளார்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஒலிம்பிக் நட்சத்திரம் பங்கேற்றார். இறுதிப்போட்டிக்கு மொத்தமாக 8 பேர் பங்கேற்றிருந்தவர்களில் இந்தியாவிலிருந்து மனுபாக்கர் மட்டும் போட்டியிட்டார். இதில், இஷா சிங் 15-வது இடமும், சுருச்சி சிங் 26-ஆம் இடமும் பிடித்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்கொரியாவின் கேயூன் சூ 246.3 புள்ளிகள் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். சீனாவின் யியோ 241.3 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு சீனா வீராங்கனை ரான்சின் ஜியாங் 221.6 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் வென்றனர். மனு பாக்கர் 181.1 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் கலப்பு அணிப் பிரிவில் வெண்கலப் பதக்கத்துடன், தனிநபர் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற 24 வயதான நடப்பு சாம்பியன் மனு பாக்கர், அடுத்ததாக 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்கிறார்.

summary

India celebrates two shooting bronzes, a historic soft tennis medal and wins across disciplines, while Manu Bhaker’s fifth-place finish in the 10m air pistol final provides a contrasting moment on Day 4

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments