ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில்!
ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் நூறு கோடி வானவில் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சொல்லாமலே, ரோஜா கூட்டம், பூ, சிவப்பு மஞ்சள் பச்சை, பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் சசி.
அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான, நூறு சாமி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரபெற்பைப் பெற்றிருந்தன.
Advertisement
Advertisement
இவர், நடிகர் ஹரிஷ் கல்யாணை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ’நூறு கோடி வானவில்’. 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே எடுக்க்கப்பட்டு வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம், பல்வேறு காரணங்களால் வெளியாகமல் இருந்தது.
இந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 6 ஆம் தேதி நூறு கோடி வானவில் திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடிக்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னிஜெயந்த், சம்பத் ராஜ், வி.ஜே. பார்வதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
நூறு கோடி வானவில் படத்துக்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரசன்னா எஸ்.குமார் மேற்கொண்டுள்ளார்.
It has been officially announced that actor Harish Kalyan’s film *Nooru Kodi Vaanavil* will be released directly on the ZEE5 OTT platform.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.