மட்டஞ்சேரி மாஃபியா திரைப்படத்திற்குத் தயாராகும் ஆசிஃப் அலி!
மட்டஞ்சேரி மாஃபியாவில் ஆசிஃப் அலி தோற்றம்....
மட்டஞ்சேரி மாஃபியா திரைப்படத்திற்கான நடிகர் ஆசிஃப் அலியின் புதிய தோற்றம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி தன் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதில், பிரபல இளம் நாயகர்களான ஆசிஃப் அலி மற்றும் நஸ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு, மட்டஞ்சேரி மாஃபியா எனப் பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். ஆக்ஷன் பாணியில் உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் ஆசிஃப் அலியின் புதிய தோற்றப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் ஆசிஃப் அலி இப்படத்தில் இணைந்திருப்பது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
Actor Asif Ali's new look for the film 'Mattancherry Mafia' has been revealed.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.