FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரளத்திலேயே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்த பெத்லகேம் குடும்ப யூனிட்!

பெத்லகேம் குடும்ப யூனிட் வசூல் குறித்து...

8 செப்டம்பர் 2026, 3:47 pm IST
பகிர்:

நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவான பெத்லேகம் குடும்ப யூனிட் திரைப்படம் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ நடிப்பில் பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் கடந்த ஆக .21ஆம் தேதி மலையாளத்தில் வெளியானது. நாயகனுக்கும் 10 வயது குறைவான நாயகிக்கும் இடையேயான காதல் கதையாக இப்படம் உருவானது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மேலும், இப்படம் நடிகர் மோகன்லாலின் எம்புரான், துடரும் ஆகிய படங்களைப் போல் கேரளத்திலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சாதாரணமாக ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் மலையாளத் திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாவது மற்ற திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bethlehem kudumba unit grossed over ₹100 crore in Kerala alone!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments