கல்லா நிக்குறியே... அன்பில் அவன் படத்தின் பாடல் ப்ரோமோ வெளியீடு!
அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் ப்ரோமோ வெளியானது.
அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் ப்ரோமோ வெளியானது.
அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது ’அன்பில் அவன்’ படத்தின் வெளியீடு அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடலான ‘கல்லா நிக்குறியே’ நாளை வெளியாகவுள்ளது.
இப்பாடலின் ப்ரோமோ விடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.
ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Song promo from the movie 'Anbil Avan' released
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.