என்னை ஆளும் காதல் நீ... இளையராஜா பாடலைப் பாடிய மிருணாள் தாக்குர்!
மிருணாள் தாக்குர் பாடிய விடியோ வைரல்...
நடிகை மிருணாள் தாக்குர் தமிழில் பாடிய விடியோ வைரலாகியுள்ளது.
நடிகைகளுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் போதும் அவர்களை இந்திய சினிமா ’அலேக்காக’த் தூக்கிக் கொண்டாட... அப்படித்தான், நடிகை மிருணாள் தாக்குருக்கு சீதா ராமம் திரைப்படத்தின் நூர்ஜஹான் கதாபாத்திரம் உச்சத்திற்குக் அழைத்துச் சென்றது. அதன்பின், வலுவான கதாபாத்திரங்கள் அமையவில்லை என்றாலும் இந்தியளவில் நட்சத்திர நடிகையாக ஜொலிப்பதுடன் ஹிந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாகியுள்ளார்.
கிளாமரான தோற்றம், கச்சிதமான முகவெட்டு என அழகான நடிகையாக இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக பல தயாரிப்பாளர்களும் மிருணாளை ஒப்பந்தம் செய்யவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதற்கிடையே, பிரபலமான நடிகையென்பதால் எப்போதும் அவரைச் சுற்றி காதல் கிசுகிசுக்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன், நடிகர் தனுஷும் மிருணாளும் காதலிப்பதாக வதந்திகள் பரவின. மேலும், கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வாலை மிருணாள் டேட்டிங் செய்வதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், மிருணாள் தாக்குர் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவான ராஜ ராஜ சோழன் நான் பாடலை ஒலிக்கவிட்டு அதனுடன் இணைந்து தமிழிலேயே இவரும் பாடினார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
A video of actress Mrunal Thakur singing in Tamil has gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.