மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படத்தின் டிரைலர்!
பாதயாத்திரா டிரைலர் வெளியானது...
இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன் நடிகர் மம்மூட்டி கூட்டணியில் உருவான பாதயாத்திரா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
Advertisement
Advertisement
தற்போது, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து பாதயாத்ரா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டியே தயாரித்த இப்படத்தில் அவரே நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
திரை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். மலை கிராமத்தில் மருத்துவராக இருக்கும் மம்மூட்டிக்கும் அம்மக்களுக்கும் இடையேயான உறவைப் பேசும் படமாக இது உருவாகியிருப்பதாகத் தெரிகிறது.
The trailer for the film Padayathra, a collaboration between director Adoor Gopalakrishnan and actor Mammootty, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.