பிக் பாஸ் 10 : லட்சுமி பிரியாவால் காயமடைந்த நடிகை ஆனந்தி!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டியில், லட்சுமி பிரியாவால், நடிகை ஆனந்தி காயமடைந்தது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட போட்டியில், லட்சுமி பிரியா தள்ளியதில் நடிகை ஆனந்தி காயமடைந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 2வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான ஆளும் அணி தலைவராக ஷமா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த வாரம் நடைபெற்ற பிக் பாஸ் வழங்கிய போட்டியில் சக போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
வீட்டில் நடைபெற்ற போட்டி, பரபரப்பான கட்டத்தை எட்டிய நிலையில், லட்சுமி பிரியா, ஆனந்தியை தள்ளியதில், ஆனந்தி காயமடைந்து வலியில் அழுது துடித்தார்.
இதையடுத்து, மற்ற போட்டியாளர்கள் உடனடியாக ஆனந்திக்கு உதவி செய்து, அவரை தாங்கிப் பிடித்து டாஸ்க் பகுதியிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலையுல் இதில் ஒளிபரப்பாகிறது.
Bigg Boss 10 Task Actress Aananthi injured by Lakshmi Priya
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.