FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்தியாவில் செப். 18-ல் வெளியாகிறது ரெசிடென்ட் ஈவில்!

ரெசிடென்ட் ஈவில் திரைப்படம் வெளியீடு பற்றி...

16 செப்டம்பர் 2026, 2:23 pm IST
ரெசிடென்ட் ஈவில் - x
பகிர்:

இந்திய திரையரங்குகளில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி ரெசிடென்ட் ஈவில் வெளியாகவுள்ளது.

உலகப்புகழ் பெற்ற விடியோ கேம் தொடரை அடிப்படையாகக் கொண்டு ரெசிடென்ட் ஈவில் திரைப்படம் உலகம் முழுவதும் நாளை மறுநாள் வெளியாகவுள்ளது.

ஜாக் கிரெக்கர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஆஸ்டின் ஆபிரம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement

முற்றிலும் புதிய கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், மருத்துவப் பொருள்களை விநியோகம் செய்யும் பிரையன் (ஆஸ்டின் ஆபிரம்ஸ்), ஒரு துரதிர்ஷ்டவசமான, பயங்கரமான இரவில் குழப்பமான சூழலுக்குள் சிக்குகிறார். அதிலிருந்து உயிர் பிழைப்பதற்கான விறுவிறுப்பான மற்றும் இடைவிடாத போராட்டத்தை எதிர்கொள்ளும் வகையில் கதை அமைந்துள்ளது.

இந்த படத்தின் இரண்டு டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்திய திரையரங்குகளில் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

summary

Resident Evil releases in India on September 18!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments