FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதல்வர் விஜய் - ஜேசன் சஞ்சய் ஒரே மாதிரி இருக்கிறார்கள்: மாஸ்டர் ராஜு சுந்தரம்

முதல்வர் விஜய் மற்றும் அவரது மகன் குறித்து நடன இயக்குநர் ராஜு சுந்தரம் கூறியிருப்பதாவது...

17 செப்டம்பர் 2026, 3:12 pm IST
முதல்வர் விஜய், ஜேசன் சஞ்சய் - படங்கள்: எக்ஸ் / டிவிகேஎச்க்யூ, ஜேசன் சஞ்சய்
பகிர்:

முதல்வர் விஜய் மற்றும் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என தேசிய விருது வென்ற நடன இயக்குநர் ராஜு சுந்தரம் கூறியது கவனம் பெற்று வருகிறது.

லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாகவும் ஃபரியா அப்துல்லா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான இதில், ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இப்படம் அக். 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இதன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா செப். 18 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் ராஜு சுந்தரம் நேர்காணல் ஒன்றில் முதல்வர் விஜய் மற்றும் ஜேசன் சஞ்சய் குறித்து கூறியிருப்பதாவது:

விஜய் சார் மாதிரி யாராலும் நடனமாட முடியாது. நாம் சாதரண ஒன்றைக் கொடுத்தாலும் அவர் அதை மேலும் சிறப்பானதாக மாற்றிவிடுவார்.

ஜேசன் சஞ்சய்யைப் பார்த்தால் விஜய்யைப் பார்த்தது போல இருக்கிறது. விஜய் சாரைப் பார்த்தால் ஜேசன் சஞ்சய் போலிருக்கிறது. இருவரும் அமைதியானவர்கள்; நன்றாக உற்றுநோக்கக் கூடியவர்கள். அதிகமாகவே பேசமாட்டார்கள். இதெல்லாம் இருவரிடமும் ஒரே மாதிரி இருக்கிறது என்றார்.

summary

Chief Minister Vijay and Jason Sanjay look alike: Master Raju Sundaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments