ரஜினிகாந்தின் ஜெயிலர் - 2! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்ஸ்!
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படத்தின் அப்டேட்டுகள் நாளை முதல் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது.
ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
அதுமட்டுமின்றி சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாள்களுக்கு முன் வெளியான இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ நல்ல வரவேற்பைப் பெற்று வைரலாகியுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படம் இந்தாண்டு அக்டோபர் 15 அன்று வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் வெளியீடு தொடர்பான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் போன்ற அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு நாளை முதல் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The team has announced that updates for the film Jailer - 2, starring actor Rajinikanth, will be released from tomorrow.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.