FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மொத ராத்திரி பட நாயகனுக்கு குவியும் வாழ்த்து!

நடிகர் ரிஷிகாந்த் பிறந்த நாளுக்கு குவியும் வாழ்த்துச் செய்தி தொடர்பாக...

21 செப்டம்பர் 2026, 5:52 pm IST
மொத ராத்திரி போஸ்டர் - படம்: எக்ஸ்
பகிர்:

மொத ராத்திரி படத்தின் நாயகன் ரிஷிகாந்த் பிறந்த நாளுக்கு, அந்தப் படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இரும்புத்திரை, ஹீரோ, ராக்கி, ஓ2 போன்ற படங்களில் சிறிய பாத்திரங்களிலும், கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் ரஜினிகாந்தின் கூலி படங்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் ரிஷிகாந்த்.

மேலும், இவர் மாதகம் என்ற இணையத் தொடரிலும் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் சனாந்த் ஆகியோருடன் இணைந்து ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள 'டோரதி' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ’மொத ராத்திரி’.

இந்தத் திரைப்படம் அண்மையில் ஓடிடியில் வெளியாகி, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து டிரெண்டானது.

இந்நிலையில், நடிகர் ரிஷிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு 'மொத ராத்திரி' படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி உள்பட ரசிகர்கள் பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

summary

Many people, including director Raja Karuppasamy, are extending their birthday wishes to Rishikanth, the lead actor of the film Motha Rathiri.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments