பண மோசடி புகார்: பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது!
பிக் பாஸ் பிரபலம் வர்ஷினி வெங்கட் கைது தொடர்பாக...
இளைஞர் ஒருவரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் மற்றும் செல்போனை பறித்ததாக, அளிப்பட்ட புகாரின் அடிப்படையில் நடிகை வர்ஷினி வெங்கட் கைது செய்யப்பட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 8 சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வர்ஷினி வெங்கட். இவர், இந்த நிகழ்ச்சியில் குறுகிய காலம் இருந்தாலும் மக்களிடையே நன்கு அறியப்பட்டார்.
இதனைத் தொடந்து, சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திலும் இவர் நடித்திருந்தார். நடிகை வர்ஷினி தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை, தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், குறும்படம் எடுப்பதற்காக முதலீடு செய்யுங்கள் என்று கூறி, தன்னை ஏமாற்றியதாக, இளைஞர் ஒருவர் நடிகை வர்ஷினி வெங்கட் மீது புகார் அளித்துள்ளார்.
பணத்தைத்திரும்ப கேட்டபோது, கடந்த ஆக. 22 ஆம் தேதி பேச அழைத்து, தன்னை தாக்கி 2 செல்போன் மற்றும் ரூ. 50,000 பணத்தைப் பறித்ததாகவும், அதன் பின்னர் தொலைபேசி மூலம் மிரட்டி ரூ. 5 லட்சம் பணத்தை பறித்ததாகவும், மேலும் ரூ. 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, கிண்டி காவல் துறையினர் நடிகை வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்பட 4 பேர் மீது, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், நடிகை வர்ஷினியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Actress Varshini Venkat has been arrested following a complaint alleging that she threatened a young man and snatched Rs 5 lakh in cash and a mobile phone from him.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.