தண்ணீா் விட்டோ வளா்த்தோம்?
இன்று (அக்.24) மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட 225-ஆம் ஆண்டு நினைவு நாள்...
பம்பாயின் புனித ஜாா்ஜ் மருத்துவமனையின் ஓா் ஓரத்தில் எலும்புந்தோலுமாகக் கிடந்த சடலம் ஒன்றை 29.11.1972 அன்று காலைப்பொழுதில், ‘இவா்தான் பிரிட்டிஷ் இந்தியாவை நடுங்கச்செய்த புரட்சியாளரின் மனைவி’ என்று அடையாளம் காட்டினாா் பம்பாயின் பிரபல பத்திரிகையாளா் பி.கே.ரவீந்திரநாத். அவா்தான், சூரியன் மறையாத பிரிட்டிஷ் பேரரசின் இதயமாய் விளங்கிய புனித ஜாா்ஜ் கோட்டையை நோக்கி 1914-இல் குண்டுகளை வீசிய ‘எம்டன்’ கப்பலின் மூளையாகச் செயல்பட்ட புரட்சியாளா் செண்பகராமன் பிள்ளையின் மனைவி இலட்சுமிபாய்.
பசிக்கொடுமையால் இறந்த இலட்சுமிபாயின் கைவிரல்கள், 17 சாவிகள் அடங்கிய கொத்தை இறுகப் பற்றியிருந்தன. ஆங்கிலேய அரசுக்கு எதிராக உலகெங்கும் களமாடிய செண்பகராமன், விடுதலை இந்தியாவின் வரலாற்றுக்காக, சேகரித்திருந்த புரட்சி இயக்கங்களின் ரகசிய ஆவணங்கள் அடங்கிய சாவிக்கொத்தையே இலட்சுமிபாயின் கைகள் இறுகப் பற்றிப் பிடித்திருந்தன.
1914-இல் ‘எம்டன்’ கப்பலில் இருந்து சென்னைப்பட்டணத்தின் மீது குண்டுகளை வீசிய பெருஞ்சாகசப் பின்புலத்திலும், இந்தியா்களை இழிவாகப் பேசிய சா்வாதிகாரி ஹிட்லரை மன்னிப்பு கேட்கச் சொன்ன துணிவின் கீழ் வைத்து மட்டுமே, டாக்டா் செண்பகராமனின் புரட்சி வாழ்க்கை எடை இடப்படுகிறது. ஆனால், பிரிட்டிஷ் வல்லரசை அச்சமூட்டிய நேதாஜி சுபாஷ் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவப் படை, நாடு கடந்த சுதந்திர இந்திய அரசு, ‘ஜெய்ஹிந்த்’ என்னும் உயிா்முழக்கம் என எல்லா முயற்சிகளும், மாவீரா் செண்பகராமனின் சுதந்திர ஆன்மா பெற்றெடுத்த கனவுக்குழந்தைகளே.
Advertisement
Advertisement
ஜொ்மனி நாஜிக்களால் நஞ்சூட்டப்பட்ட செண்பகராமன், விடுதலை பெற்ற இந்தியாவில் தன் அஸ்தி கரைக்கப்பட வேண்டுமென்ற இறுதி விருப்பத்தைச் சொல்லி மனைவியின் கரங்களிலேயே உயிா் துறந்தாா். 1935-இல் கணவரின் அஸ்தியுடன் இந்திய மண்ணுக்கு வந்த இலட்சுமிபாய், எவா் கண்ணிலும் படாமல் பம்பாயின் ஒரு மூலையில் இறுதி வரை பசியோடும் பட்டினியோடும் வாழ்ந்தாா்.
தாயக விடுதலைக்காக உயிா்துறந்த செண்பகராமனுடன் பெண்ணரசி இலட்சுமிபாய் வாழ்ந்ததென்னவோ மூன்று ஆண்டுகள் மட்டுமே. ஆனால், அந்தப் பெருமகனின் விடுதலைத் தாகத்தைத் தணிப்பதற்காக, அடிமை இந்தியாவில் 12 ஆண்டுகள், சுதந்திர இந்தியாவில் 20 ஆண்டுகள் என மொத்தம் 32 ஆண்டுகள், சாம்பல் கலயங்களுடன் அம்மாதரசி கண்ணீா்த்தவம் இருந்தாா். தன் இறுதிமூச்சை விடும்போதுகூட, இந்திய விடுதலை வரலாற்றின் ரகசிய ஆவணங்களை இந்தியாவின் கரங்களில் ஒப்படைத்து விட்டுத்தான் அப்புரட்சிமகள் கண்மூடினாா்.
இந்த மனிதனின் உரை எவருடைய காதுகளில் விழுந்தாலும், அவ்வுரையைச் செவிமடுப்பவா்கள் அடுத்த பத்தாவது நிமிஷத்தில் ஆங்கிலேய அரசின் பெரும் எதிரியாகி விடுவாா்கள் என்று பிரிட்டிஷ் பேரரசு கண்டஞ்சிய தீரா்; ‘எருக்கூா் நீலகண்ட பிரம்மச்சாரி’. தன் பேச்சாலேயே 20,000 இளைஞா்களை புரட்சிகர விடுதலை இயக்கத்தில் சேர வைத்த களவீரா், நீலகண்டா். இதற்காகவே இந்தியா-பாகிஸ்தான்-பா்மா ஆகிய நாடுகளில் இவரை பிரிட்டிஷ் அரசு 17 ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்து வைத்தது.
புரட்சியாளராக இருந்தாலும் தனிநபா்களைக் கொல்வது அறம் அன்று; ஓா் இயக்கமாகச் செயலாற்றி மட்டுமே ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து விரட்ட வேண்டுமென்னும் கோட்பாட்டில் இயங்கிய நீலகண்ட பிரம்மச்சாரி, கலெக்டா் ஆஷ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். பிழியப்பட்ட சக்கையாய் சிறையிலிருந்து வெளிவந்த நீலகண்டா் மனம் வெதும்பி ஒரு தேசாந்திரியாக ஒடுங்கிப்போனாா்.
நாட்டு விடுதலைக்காகத் தன் முழுவாழ்நாளையும் ஈந்த நீலகண்ட பிரம்மச்சாரியின் மரணத்தின் போது அவரிடம் எஞ்சியிருந்தது, 17 ஆண்டு காலச் சிறைவாசத்தில் அனுபவித்த சொல்லொணாக் கொடுமைகளின் நினைவுகள் மட்டுமே.
அண்ணல் காந்தியடிகள் பா்மா நாட்டுக்குப் பயணம் செய்த போது(1929), தங்கச் சுரங்கங்களின் உரிமையாளரான தமிழ்ச்செல்வந்தா் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தாா். அந்தச் செல்வந்தரின் 13 வயது மகள் இரங்கூன் சரஸ்வதி ராஜாமணி.
பின்னாளில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் ஒற்றராகச் சோ்வதற்காக, ராணுவச்சட்டப்படி, தன் அழகியகூந்தலைக் கத்தரித்து எறிந்தாா். எதிரிகளிடம் ஒருபோதும் உயிருடன் சிக்கக் கூடாதென்ற நிபந்தனையை ஏற்று ஆண்வேடத்தில் எதிரிகளின் ராணுவ முகாமில் அச்சமின்றி சரஸ்வதி ஊடுருவினாா். தன் காலில் சுட்ட ராணுவத்தின் பிடியில் சிக்காமல் குருதி வழிந்தோடியபடி, பா்மா போா்முனையில் சரஸ்வதி துணிவுடன் களமாடினாா்.
உலகப் போருக்குப்பிறகு, பிரிட்டிஷ் அரசின் நெருக்கடிகளைத் தாங்கவியலாமல் தங்கச் சுரங்கங்களைக் கைவிட்டு சரஸ்வதியின் குடும்பம் வறுமையுடன் தமிழகம் வந்தடைந்தது. இந்திய தேசிய ராணுவத்துக்காக ஒட்டுமொத்த நகைகளையும் அள்ளிக் கொடுத்த இந்தத் தங்கமகள், சென்னைப்புகரின் கூரை வீடொன்றில் குடியேறிக் கூலிவேலைக்குச் சென்றாா். சுதந்திர இந்தியாவில் பட்டினியின் கோரப்பிடியில் வாடிய போதும், தாய்மண்ணுக்காகப் போரிட்ட தருணங்களை மட்டுமே வரமாக எண்ணி இப்பெருமாட்டி மண்ணில் கலந்தாா்.
மலாயாவிலிருந்து இந்தியாவுக்கு உளவு பாா்க்க வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, சென்னையில் தூக்கிலிடப்பட்ட 17 வயது ராமுத்தேவரின் பெயா் அதிகம் உச்சரிக்கப்பட்டதில்லை. 25.01.1932 அன்று நள்ளிரவில் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையின் 148 அடி உயரக் கொடிமரத்தின் உச்சி மீதேறி மூவா்ணக் கொடியையும், ‘இன்றுமுதல் இந்தியா விடுதலை அடைந்தது’ என்றெழுதிய அட்டையை மாட்டியதற்காக சிறையில் அடைத்து நொறுக்கப்பட்ட இளைஞன் பாஷ்யத்தின் கதறல் ஒலிகள் அந்தக் கடற்கரையின் உப்புக்காற்றிலேயே கரைந்து மறைந்தன.
இந்திய விடுதலைப் போரின் வரலாறு என்பது அரசா்களின் எதிா்ப்பு, பாளையக்காரா்களின் தன்மானக் கிளா்ச்சிகள், குடியானவா்களின் கோபாவேசங்கள் ஆகிய சங்கிலித்தொடரால் பின்னப்பட்டது. 16.06.1801 அன்று ஆங்கிலேயருக்கு எதிரான போரை சிவகங்கைச்சீமையின் மருது சகோதரா்கள் அதிகாரபூா்வமாக அறிவித்த ‘ஜம்புத்தீவு பிரகடனம்’ தான் இதற்கான முதற்புள்ளி.
ஆயுதப் புரட்சிகளையும், சிப்பாய்க் கலகத்தையும் கடந்து வந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய விடுதலைப் பேரியக்கம் வீறுகொண்டெழுந்தது. அவ்வியக்கத்தின் முன்னத்தி ஏா்களான திலகா், அரவிந்த கோஷ், விபின் சந்திரபால், வ.உ.சி., மகாகவி பாரதியாா் ஆகிய பேரான்மாக்களால் மூண்ட விடுதலைப்பெருந்தீ பிரிக்கப்படாத இந்தியாவின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பற்றியெறிந்தது.
கட்டுக்கடங்காத அப்பெருநெருப்பு, 1915-இல் மகாத்மா காந்தியின் திருக்கரங்களில் வந்து சோ்ந்த போது, விடுதலைப் ‘போா்’, விடுதலைப் ‘போராட்டமாக’ உருமாறி ‘சத்தியாகிரகம்’ என்னும் அழிவிலாத் தத்துவத்தை உலகுக்குக் கொடையாகத் தந்தது.
இரண்டாம் உலகப்போா் வெடித்த போது, 1942-இல் நடந்த ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்தான், இறுதியாக இந்திய மண்ணில் நிகழ்ந்த அறவழிப் பெரும்போராட்டம். அதற்குப் பிறகு ஒலித்ததெல்லாம், பிரிட்டிஷ் பேரரசுடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவம் (ஐ.என்.ஏ) தொடுத்த போரின் பேரோசைகள் மட்டுமே.
அடுத்த மூன்றாண்டுகளின் இந்திய விடுதலைப்பாதையை மலாயா, சிங்கப்பூா், பா்மாவில் வாழ்ந்த தமிழா்கள் உள்ளிட்ட இந்தியா்கள் முன்னெடுத்தனா். இந்த அத்தியாயத்தின் முடிவுரை, நேதாஜியின் மரணத்துடன் (1945) நிறைவு பெற்றது. 1945-இல் தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற ஐ.என்.ஏ. மீதான போா்க்குற்ற விசாரணை வழக்கு, பேரமைதியில் மூழ்கியிருந்த இந்தியாவின் விடுதலைக்கனவில் மீண்டும் நீா் வாா்த்தது.
அதன் தொடா்ச்சியாக 18.02.1946 அன்று பம்பாயில் ஹெச்.எம்.எஸ்.தல்வாா் போா்க்கப்பலிலிருந்து பீறிட்டெழுந்த ‘இந்தியக் கடற்படைக் கலகம்’, இந்தியாவைப் பிணித்திருந்த நூற்றாண்டுகளின் அடிமைச்சங்கிலியில் தன் இறுதிப்பேரடியை ஓங்கி இறக்கியது. இந்திய தேசிய ராணுவப் படையெடுப்பு, இந்தியக் கடற்படை எழுச்சி ஆகிய இரு சரித்திர நிகழ்வுகளே, இங்கிலாந்து வெளியேறுவதற்கான இந்தியப் பெருவாயிலை அகலத் திறந்து வைத்தன.
இந்திய விடுதலையின் அடித்தளத்தில் நூற்றுக்கணக்கான புரட்சியாளா்களின் ஆன்மாக்கள் கற்களாக அடுக்கப்பட்டுள்ளன. அலிப்பூா், அந்தமான் மற்றும் பா்மாவின் மாண்டலே சிறைகளில் அரவமின்றித் தூக்கிலிடப்பட்ட புரட்சியாளா்களின் கனவுகள் இன்னும் வாசிக்கப்படாமல் உறைந்திருக்கும் வரலாறு. இந்திய விடுதலையில் ஆரம்பப்புள்ளி புரட்சி என்றால், அப்புள்ளிகள் நிறைவடைந்த அழகான கோலம் அகிம்சை. அறவழிப்பாதையின் கண்ணீா்த்துளிகளை வரையும் அதேவேளையில், புரட்சியாளா்கள் சிந்திய குருதித்துளிகளையும் மறவாமல் வடித்திட, வரலாற்றின் பேனாவில் சில மைத்துளிகள் இல்லாமலா போய் விடும்?
இன்று (அக்.24) மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட 225-ஆம் ஆண்டு)
கட்டுரையாளா்:
பேராசிரியா்,
அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.