28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!
லண்டனில் இருந்து சிகாகோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது குறித்து...
லண்டனில் இருந்து சிகாகோவுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பறந்துகொண்டிருக்கும்போதே 28,000 அடி கீழே இறங்கியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 777 பயணிகள் விமானம் இன்று லண்டனில் இருந்து சிகாகோவுக்குப் புறப்பட்டது. சில நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் 28 ஆயிரம் அடி வரை கீழே இறங்கியதாகத் தெரிகிறது.
அயர்லாந்தில் பறந்தபோது 9000 அடிக்கு கீழே வரை விமானம் இறங்கியதாக விமானக் கண்காணிப்புத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் அயர்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையில், உரிய காரணம் குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு செப். 30 ஆம் தேதி காலை, 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை சக விமானி ஹமாம் அல் ஹமாமி கத்தியால் குத்தி விமானத்தை கவிழ்க்க முயற்சித்தார்.
இச்சம்பவத்தில் பயணிகள் சாதூர்யமாக செயல்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்மித் மச்சாரை காப்பாற்றி, சக விமானியை கைது செய்தனர். விமானத்தில் இருந்த பயணிகளில் ஒருவர் விமானியாக இருந்ததால் விமானமும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
London Chicago Flight Descends 28,000 ft Within Minutes, Declares Emergency
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.