சிற்பக் கலையில் முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம்! அக். 14 வரை விண்ணப்பிக்கலாம்!
சிற்பக் கலையில் முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இரண்டாண்டு முதுநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்தக் கல்லூரியில் இளநிலையில் மரபு கட்டடக்கலை, வண்ணக்கலை, மரபு சிற்பக்கலை, கற்சிற்பம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இளைய சமுதாயத்தினர் தமிழகத்தின் தொன்மையான மரபு கட்டடக் கலை மற்றும் மரபு சிற்பக்கலை ஆகியவற்றை கற்று உலகளவில் நமது தமிழகத்தின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலையை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளைக் கருதியும், மாமல்லபுரம், அரசினர் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியில் மரபு கட்டடக்கலை (எம்.டெக்.), மரபு வண்ணம் (எம்எஃப்ஏ) மற்றும் மரபு சிற்பக் கலை (எம்எஃப்ஏ) (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம்) ஆகிய பிரிவுகளில் 2 ஆண்டுகால முதுநிலைப் பட்டப்படிப்பு நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது
அதன்படி, இங்கு நிகழ் கல்வியாண்டு (2026-2027) முதல் முதுநிலை மரபு கட்டடக்கலை, மரபு சிற்பக்கலை, மரபு வண்ணக்கலை போன்ற பாடப்பிரிவுகளில், இரண்டாண்டு முதுகலை பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையில், இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவா்கள், முதுநிலைப் படிப்பில் சேர, https://artandculture.tn.gov.in என்ற வலைதள முகவரியில் அக்.14-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
A two-year postgraduate degree program in architecture and sculpture has been introduced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.