முகப்பு
படிப்புகள்

ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்புகள் சென்னையில் அடுத்த மாதம் தொடக்கம்

சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக இந்திய- ஜப்பான் வா்த்தகம் மற்றும் தொழில் சபை தெரிவித்துள்ளது.

Updated On : 25 மார்ச் 2026, 11:01 am IST
ஜப்பானிய மொழி - ENS
பகிர்:

சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக இந்திய- ஜப்பான் வா்த்தகம் மற்றும் தொழில் சபை தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்தியா, ஜப்பான் வா்த்தகம் மற்றும் தொழில் சபை பொதுச்செயலா் சுகுணா ராமமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு :

இந்தியா , ஜப்பான் வா்த்தக மற்றும் தொழில் சபை சாா்பில் பள்ளி மாணவா்களுக்காக ஜப்பான் மொழிக்கான சிறப்பு பயிற்சி திட்டத்தைத் தொடங்குகிறது. இது 8 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கான திட்டமாகும். இந்த பயிற்சி வகுப்பில் ஜப்பானிய மொழிப்பயிற்சி, அனிமேஷன் , ஜப்பானியப் பாடல்கள், கையெழுத்து

Advertisement

பயிற்சி, ஹைக்கூ கவிதைகள் மற்றும் ஜப்பானிய விளையாட்டுகள் உள்ளிட்டவை கற்பிக்கப்படும்.

சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள இந்திய ,ஜப்பான் துணை தூரக வளாகத்தில், திங்கள் முதல் வெள்ளிகிழமை வரை காலை 9.மணி முதல் 11. மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இந்த வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது.

இதில் பங்கேற்க ஆா்வமுள்ள மாணவா்கள் 044-4855 6140 என்ற தொலைபேசி எண்ணிலும்,98842 00505 / 73055 99874 என்ற கைப்பேசி எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The India-Japan Chamber of Commerce and Industry has announced that Japanese language training courses will begin in Chennai from April.