FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

சாட் நுழைவுத் தேர்வு! தகுதி, பாடப்பிரிவு, தேர்வு முறை - முழு விவரம்

சாட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி, பாடப்பிரிவு, தேர்வு முறை குறித்த முழு விவரம்

Updated On : 15 ஜூலை 2026, 4:44 pm IST
சாட் நுழைவுத் தேர்வு - File photo
பகிர்:

இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர சாட் (SAT) தேர்வை எழுத வேண்டும். குறிப்பாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, சாட் தேர்வு மதிப்பெண்கள் பேருதவி செய்யும்.

இந்திய மாணவராக இருப்பவர், உலகில் எந்த மூலையிலிருந்தும் இந்த தேர்வை எழுதலாம். ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்த தேர்வு, மிகவும் எளிதாக எழுதும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது எப்போதும் டிஜிட்டல் முறையில் நடத்ப்படும் தேர்வாகும்.

இந்த தேர்வை யாரெல்லாம் எழுதலாம், என்றால், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள், வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பினால் இந்த தேர்வை எழுதலாம்.

Advertisement

Advertisement

சரியாக 2 மணி நேரம் 14 நிமிடங்கள் தேர்வு நடைபெறும். படிப்பது, எழுதுவது, கணிதம் என மூன்று பிரிவுகளாக தேர்வு நடத்தப்படுகிறது.

எழுதவும் படிக்கவும் 54 கேள்விகள் வழங்கப்படும். இதற்கு 64 நிமிடங்களும் கணிதத்துக்கு 44 கேள்விகளுக்கு விடையளிக்க 70 நிமிடங்களும் ஒதுக்கப்படும். மதிப்பெண்கள் 400 முதல் 1600 வரை கணக்கிடப்படுமாம்.

தேர்வு நடைபெற்று 13 நாள்களில் சாட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்வை ஒருவர் எழுதினால், இந்த மதிப்பெண்களை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். இந்தியாவில் இந்த தேர்வை எழுத வேண்டும் என்றால் தேர்வுக் கட்டணம் சுமார் ரூ.12,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்புகள் ஏதும் இல்லை. இளநிலை பட்டப்படிப்புக்கானது என்பதால் பொதுவாக 20 வயதுடையவர்கள் எழுதுகிறார்கள். தற்போது 11 மற்றும் 12ஆம் வகுப்புப் படிப்பவர்களும் எழுதுகிறார்கள்.

பள்ளிப் படிப்பை முடித்து வெளிநாடு செல்ல விரும்புவோர், இந்த சாட் தேர்வை எழுதுகிறார்கள். 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்கள் இந்த தேர்வுக்கு பெற்றோரின் அனுமதி பெற்றே விண்ணப்பிக்க முடியும்.

summary

SAT Entrance Exam! Eligibility, Syllabus, Exam Pattern – Full Details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments