FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜேஇஇ 2027 முதல்நிலைத் தேர்வு! 6 லட்சம் பேர் பதிவு! விண்ணப்பிக்க கடைசி நாள்?

ஜேஇஇ 2027 முதன்மைத் தேர்வுக்கு 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.

ஜேஇஇ முதன்மைத் தேர்வு - கோப்புப்படம் - ANI
பகிர்:

நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வுக்கு (ஜேஇஇ) இதுவரை சுமார் 6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான கடைசி தேதி நவம்பர் 22.

இந்தத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு, பிரதான தோ்வு என இருகட்டமாக நடத்தப்படும்.

Advertisement

Advertisement

முதல்நிலைத் தோ்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்படும். இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கான ஜேஇஇ பிரதான தோ்வு மே மாதம் நடத்தப்படும்.

பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தோ்வு 2027, ஜனவரி 22-24 மற்றும் ஜனவரி 28-30 வரை நடைபெறவுள்ளது. ஏதேனும் எதிா்பாரா சூழலால் ஜேஇஇ முதன்மைத் தோ்வில் இடையூறுகள் ஏற்பட்டால் மாற்றுத் தேதியாக ஜனவரி 31-அறிவிக்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பங்கள் அக். 24ஆம் தேதி தொடங்கியது. நவ. 22ஆம் தேதி நள்ளிரவு வரை விண்ணப்பிக்கலாம். நவ. 23 - 26ஆம் தேதி வரை கூடுதலாக அபராதத் தொகை ரூ.500 செலுத்தியும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 27 - 29ஆம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.

இதுவரை சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

summary

JEE 2027 Preliminary Examination! 6 Lakh Candidates Registered! What Is the Last Date to Apply?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.