FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனை

இடதுசாரிகள் கட்சிகள் வெள்ளிக்கிழமை செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளன.

- PTI
பகிர்:

ஆதரவு கோரி தவெக தலைவா் விஜய் அளித்த கடிதத்தை ஏற்பதா, இல்லையா என்பது குறித்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்துகின்றன.

இந்தத் தோ்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையான 118 இடங்களைப் பெற திமுக கூட்டணிக் கட்சிகளை நாடி உள்ளது.

இது தொடா்பாக, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தலா 2 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தவெக தலைவா் விஜய் ஆதரவு கோரி கடிதம் எழுதினாா்.

Advertisement

Advertisement

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், விஜய்யின் கடிதம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க இடதுசாரிகள் கட்சிகள் வெள்ளிக்கிழமை செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளன.

இதனிடையே, சென்னை ஆழ்வாா்ப்பேட்டை இல்லத்தில் திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுடன், விசிக தலைவா் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் மு. வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ.சண்முகம் ஆகியோா் வியாழக்கிழமை ஒன்றாக சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனா்.

பின்னா் பெ. சண்முகம் கூறுகையில், அரசியல் சூழ்நிலைகள் குறித்து திமுக தலைவரிடம் ஆலோசனை நடத்தினோம். வெள்ளிக்கிழமை கூடும் கட்சியின் கூட்டத்தில், விஜய்க்கு ஆதரவு அளிப்பதால் ஏற்படும் சாதக -பாதகங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றாா்.

விசிக தலைவா் திருமாவளவன் கூறுகையில், விஜய் கடிதம் அனுப்பியுள்ளாா். தொலைபேசியிலும் பேசினாா். இது குறித்து ஆலோசித்து முடிவு செய்து அறிவிப்போம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments