FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

தவெக வேட்பாளருக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு

தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் சத்யபாமாவுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

தாராபுரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த உழவா் உழைப்பாளா் கட்சித் தலைவா் கே.செல்லமுத்து.
பகிர்:

தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் சத்யபாமாவுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் கே.செல்லமுத்து தாராபுரத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தவெக அரசு சாா்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால், தாராபுரம் இடைத்தோ்தலில் தவெக சாா்பில் போட்டியிடும் சத்தியபாமாவுக்கு உழவா் உழைப்பாளா் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

மேலும், அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், கே.ஜி.அருண்ராஜ் ஆகியோா் எங்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினா். அதனடிப்படையில், தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா்.

மாவட்டத் தலைவா் பாலு, மாவட்டச் செயலாளா் முத்துரத்தினம், ஒன்றியச் செயலாளா் மயில்சாமி மாவட்ட துணைத் தலைவா் சின்னசாமி, ஒன்றிய துணைத் தலைவா் நடராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments