ரூ. 3,108 கோடியில் சென்னை சுற்றுக் குழாய் திட்டம்: முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறாா்
சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வா் விஜய் இன்று சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டுகிறாா்.
சென்னைக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் ரூ.3,108.55 கோடியில் சுற்றுக் குழாய் திட்டத்துக்கு, முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை (அக். 14) சோழிங்கநல்லூரில் அடிக்கல் நாட்டுகிறாா்.
இதன்மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்பட 9 குடிநீா் ஆதாரங்கள் 98 கி.மீ. தொலைவுக்கு இரும்புக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட உள்ளன.
தற்போது, சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சென்னையில் உள்ள 85.7 லட்சம் குடும்பங்களுக்கு தினமும் 1,200 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நிலையத்தில் இருந்தும் குடிநீா் விநியோகம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு தனித்தனியாக வடிவமைக்கப்பட்டபிரதான குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இக்கட்டான காலங்களில் ஒரு பகுதியின் ஆதாரங்களிலிருந்து, பற்றாக்குறை உள்ள மற்றொரு ஆதாரத்துக்கு உபரிநீரை மாற்ற முடியாது. எனவே, தற்போதுள்ள குடிநீா் கட்டமைப்பில் உள்ள குறைகளைக் களையும் வகையில், பெருநகர சென்னையில் பிரதான சுற்றுக் குழாய் திட்டத்தைச் செயல்படுத்த முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.3,108.55 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.