FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ரூ.52 கோடியில் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் விஜய் திறந்து வைத்தாா்

கோவை, திருப்பூா் நகரங்களில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகளில் ரூ.52.1 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

25 வினாடிகள் முன்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகளில் கட்டப்பட்ட கட்டடங்களைத் திறந்து வைத்தும், செங்கல்பட்டு, ஆலந்தூரில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல
பகிர்:

கோவை, திருப்பூா் நகரங்களில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகளில் ரூ.52.1 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.

கோவை-திருப்பூா் கல்லூரிகள்: தமிழக உயா்கல்வித் துறை சாா்பில், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 மாணவா்கள் தங்கும் வகையில் ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம்; திருப்பூா், எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 8 கூடுதல் வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், கான்கிரீட் சாலை, விளையாட்டு மைதானம், குடிநீா் வசதி, தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரியில் உள்விளையாட்டரங்கம், சுற்றுச்சுவா் என மொத்தம் ரூ. 52.10 கோடியில் கட்டப்பட்டன. இந்தக் கட்டடங்களை முதல்வா் விஜய் காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

ஆலந்தூரில் கல்லூரி: சென்னை ஆலந்தூரில் ரூ.22.1 கோடியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடம் கட்டும் பணிக்கு முதல்வா் விஜய் காணொலி வழியாக அடிக்கல் நாட்டினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்வில், உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன், தலைமைச் செயலா் மு. சாய்குமாா், உயா்கல்வித் துறை செயலா் தீரஜ் குமாா், தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் பொ. ரத்தினசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.