கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்வு: முதல்வர் விஜய் உத்தரவு
கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...
கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ. 5,000 உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள்,அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 9,646 கௌரவ விரிவுரையாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் நடப்பாண்டு நவம்பர் முதல் ரூ. 5,000 உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
மாணவர்களின் கல்விச்சேவையைப் பாதிக்காத வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் தரம் தொய்வின்றித் தொடர தங்களின் பங்களிப்பினை வழங்கிவரும் கௌரவ விரிவுரையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரித்துவரும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியத்தை ரூ. 30.000-லிருந்து ரூ.35,000- ஆகவும், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் தொகுப்பூதியத்தை ரூ.25,000-லிருந்து ரூ.30,000- ஆகவும் நவ. 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 8.741 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரிந்துவரும் 319 கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பல்வகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் தற்காலிகமாகப் பணிபுரிந்துவரும் 586 கௌரவ விரிவுரையாளர்கள் என மொத்தம் 9,646 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் பயனடைவர் என்றும், இதனால் இந்த நிதியாண்டில் அரசுக்கு ரூ. 24.12 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chief Minister Vijay has ordered an increase of Rs. 5,000 in the monthly consolidated remuneration for honorary lecturers.