விண்ணப்பித்துவிட்டீர்களா..? பேங்க் ஆஃப் பரோடாவில் அதிகாரி வேலை; இன்றே கடைசி
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள Block Chain Officers, Business Analysts மற்றும் Innovation Officers போன்ற பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில்
பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள Block Chain Officers, Business Analysts மற்றும் Innovation Officers போன்ற பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Block Chain Officers
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பி.ஈ./ பி.டெக் முடித்திருக்க வேண்டும்
பணி அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்
Advertisement
Advertisement
பணி : Business Analysts
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும்
பணி அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில், 5 ஆண்டுகள் வங்கி/ நிதி நிறுவனத் துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்
பணி : Innovation Officers
காலியிடங்கள்: 02
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
பணி அனுபவம்: 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். அதில் 3 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in/careers.htm என்ற வலை தளத்தில், விண்ணப்பதாரரின் விவரங்களைப் பூர்த்தி செய்து, சான்றிதழ்களைப் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினக்கு ரூ.600; மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.100
தேர்வு செய்யப்படும் முறை: மதிப்பெண், ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 17.08.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.