FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) (3 ஆண்டுகள்) ஓதுவார் பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர்(கு

Updated On : 17 நவம்பர் 2021, 3:31 pm IST
பகிர்:

திருச்சி மாவட்டம்‌, மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில்(2021-2022) (3 ஆண்டுகள்) ஓதுவார் பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர்(குரலிசை) பணிக்கு மாதம் ரூ.15,000 தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை
பணியிடம் : திருச்சி சமயபுரம்‌, அருள்மிகு மாரியம்மன்‌ திருக்கோவில் 
மொத்த காலியிடங்கள் : 02 

பணி: தேவார இசை ஆசிரியர் - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். 
தேவார இசைத் துறையில் 5 ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: இசை ஆசிரியர்(குரலிசை) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2021 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தேவார இசைத் துறை மற்றும் சங்கீத துறையில்(குரலிசைத்துறை) 5 ஆண்டுகளுக்கு குறையாத  தொழில்முறைப் பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும். அல்லது மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகம், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலம் இசையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.samayapurammariammantemple.org அல்லது https://hree.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : இணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 621 112.   

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments