முகப்பு
வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய வேலைவாய்ப்பு: TNPSC அறிவிப்பு

கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது.

Updated On : 24 ஜனவரி 2022, 12:55 pm IST
கோப்புப் படம்
பகிர்:


கரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் எழுத்துத் தேர்வுகளுக்கான அறிவிப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பை தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். 

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் நிலை - I பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து சமூகத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 603 அறிக்கை எண். 01/2022

Advertisement

Advertisement

துறை: இந்து சமய அறநிலையத்துறை

பணி: செயல் அலுவலர் நிலை - I (Executive Officer Grade - I)

காலியிடங்கள்: 04 

சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500 வரை.

தகுதி: கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 23.04.2022 அன்று காலை தாள்-I, மதியம் தாள்-IIக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும், 24.04.2022 அன்று தாள்-IIIக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 21.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_01_EO_GR_I_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.